சி.இ.நி.குணசீலன். இளவாலை: குடும்ப மேய்ப்புப் பணி நிலையம், சேந்தான்குளம், 1வது பதிப்பு, ஆனி 1982. (அச்சக விபரம் தரப்படவில்லை).
x, 152 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
உளவியல்துறையில் பயிற்சிபெற்ற இறைபணியாளர் குணசீலன் அடிகளார் தனது வாழ்க்கைப் பாதையில் கடந்துவந்த ஐம்பது ஆண்டுகளின் இனிய நினைவுகளை இந்நூலில் பகிர்ந்துகொள்கின்றார். அன்பு என்ற பனிமலர் சொரியும் அவரது வாழ்க்கை அனுபவங்கள் வாசிப்போரின் மனஉணர்வுகளுக்கு மென்மையான ஒத்தடம் அளிக்கின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 114840).