கனகசபை சிவானந்தமூர்த்தி. கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
xi, 210 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0635-28-3.
பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு மாணவர்களுக்கும் கற்கை ஆர்வலர்களுக்கும் ஏற்றது. இந்நூல் ஒழுக்கவியல் ஓர் அறிமுகம், ஜீ.ஈ.மூவரின் நன்மை பற்றிய ஒழுக்கவியல் நோக்கு, இயற்கை விதிகள் குறித்த கொள்கை, பரிசுத்த ஆணைக்கொள்கை, தன்முனைப்புவாதம், பயன்வழிவாதம், கருணைக்கொலை, கருக்கலைப்பு அல்லது கருச்சிதைப்பு, தற்கொலை, தண்டனை, விவாகரத்து, பெண்ணியமும் ஒழுக்கமும் ஆகிய பன்னிரு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியற்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 229376).