வே.இறைபிள்ளை (தொகுப்பாசிரியர்). கிளிநொச்சி: கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கம், 6வது பதிப்பு, ஆனி 2010, 1வது பதிப்பு, மார்ச் 2004. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், 61பி 1ம் குறுக்குத்தெரு).
66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கம், மாணவர்களின் மாண்பு கருதி திருக்குறளின் 108 குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து இவற்றுடன் அத்திசூடி, கொன்றைவேந்தன் பாக்களையும் சேர்த்து ஒரு பாடத்திட்டத்தை வகுத்து அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் மாணவர்கள் மத்தியில் திருக்குறள் தமிழ் இலக்கியத் திறத் தேர்வு ஒன்றினை 2004 முதல் நடத்தி வந்தனர். அவர்களால் நடத்தப்பெறும் திருக்குறள் தமிழ் இலக்கியத் திறத் தேர்வுக்கான பாடத்திட்டம் இதுவாகும். மாணவர், இளையோர் பணிமனைகளில் பணியாற்றுபவர்கள் ஆகிய அனைவரும் பயன்பெறுமாறு இந்நூல் தொகுக்கப்பெற்றுள்ளது. இதில் திருக்குறள் போற்றி, நூற்பெருமை, மாணவர் வாழ்வில் திருக்குறள், ஆள்வினைத்திறன், பழகும் மனிதப் பண்பாடு, மாணிக்கக் குறள், திருக்குறட் சிந்தனை, குறள் முச்சீர் மணிகள், குறள் நாற்சீர் மணிகள், வினா விடை, திருக்குறளின் பிறமொழி பெயர்ப்புக்கள், தேவர் குறள் ஆகிய 11 பிரிவுகள் உள்ளன. பின்னிணைப்பாக அத்திசூடி கொன்றை வேந்தன் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் முதற் பதிப்பு மார்ச் 2004இல் கிளிநொச்சி நிலா பதிப்பக வெளியீடாக வெளியிடப்பட்டது.