கே.வி.குணசேகரம். கோப்பாய்: கே.வி.குணசேகரம், கோப்பாய் மத்தி, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
131 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ.
இலங்கையின் வடபுலத்தின் கோப்பாய் கிராமத்தைச் சேர்ந்த நூலாசிரியர் 1968 முதல் எழுதி வருகிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இதுவரை எழுதியுள்ளார். ஆசிரியர் எழுதி வெளியிட்ட இன்பத்தை அள்ளித்தரும் இந்து மதம் என்ற தொடரில் வெளியான பத்து நூல்களுக்குப் பின் இந்நூல் வெளிவருகின்றது. வாழ்க்கையைப் பற்றிப் புரிந்துகொள்ளும்வகையில், வாழ்க்கையின் தத்துவங்கள் அனைத்தையும் பற்றிக்கூறும் திருக்குறளை ஆதாரமாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கடவுள், ஆன்மா, மனம், கொலை, புலாலுண்ணல், போதைப்பொருள் உண்ணல், களவு, விபச்சாரம். பொய் பேசுதல், பொறாமை, சினம், சூது, புறங்கூறாமை, பயனில்லாத வார்த்தைகளைப் பேசுதல், செய்ந்நன்றி மறத்தல், குடும்பம் ஆகிய 16 தலைப்புகளில் இதிலுள்ள கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.