சு.செல்லத்துரை. யாழ்ப்பாணம்: இளவாலை திருமதி சிவகாமசுந்தரி செல்லத்துரை முதலாவது ஆண்டு நினைவு நூல், இணுவில், 1வது பதிப்பு, ஜுலை 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).
194 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவி;லலை, அளவு: 21×13 சமீ.
நினைவுமலராக வெளிவந்த போதிலும் இந்நூல் வாழ்வியல் அறிவுநூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்நூலின் முதலாவது பாகம் வாழும்வழி என்றும், இரண்டாம் பாகம் வாழ்ந்த வழி என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. வாழும்வழியில் என்ற முதலாவது பகுதியில் ஆன்ம யாத்திரை, அறம் எனப்படுவது, தர்மம் என்ற ஒரு பொருள் உள்ளது, முப்பெரும் பருவம், இல்லறத்துக்குத் தலைவர் இருவர், வாழ்க்கைத்துணை, ஒருத்தனுக்கு ஒருத்தி, இல்லறம் என்பன போன்ற 20 ஆன்மீகக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. வாழ்ந்த வழி என்ற இரண்டாம் பாகத்தில் அம்மா தெய்வத்தாயானாள், சிவகாமசுந்தரியின் மங்கள உலா,புதுமண வாழ்வு, மாங்குள வாழ்வு, விவசாய வாழ்வு, இணுவில் வாழ்வு, இலண்டன் சுற்றுலா, விருந்தோம்பல் போன்ற 30 தலைப்புகளில் திருமதி சிவகாமசுந்தரியின் வாழ்வு அவரது கணவரால் விரிவாக இரைமீட்கப்பெற்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.