8104 சிந்தனைத் தேன்துளிகள்.

சி.விசாலாட்சி. கிளிநொச்சி: இந்து மாமன்றம், இந்து மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1991. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(22), 152 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 21×13.5 சமீ.

சிவமயச் செல்வி புலவர் செல்வி விசாலாட்சி ஆசிரியை அவர்கள் குப்பிளானைச் சேர்ந்தவர். திருவாசகச் சொற்பொழிவுகளில் தேர்ச்சிபெற்ற இவர் கிளிநொச்சி குருகுலத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவர். ஆன்மீகத்துறையின்பால் கொண்ட  அதீத ஈடுபாட்டினால் நைட்டிகப் பிரம்மச்சாரணியாக குருகுலத்தில் நீண்டகாலமாக நற்பணியாற்றிவருகின்றார். நீத்தல் விண்ணப்பம் என்ற பதிகத்தில் தனது சிந்தையில் ஊறிய சிந்தனைகளைச் சிந்தனைத் தேன்துளிகள் என்ற தலைப்பில் 49 கட்டுரைகளாக உருவாக்கி வழங்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11114).

ஏனைய பதிவுகள்