தொகுப்பாசிரியர் குழு. தெகிவளை: நல்லதம்பி இராசக்கோன் நினைவுக் குழு, Babaji College Kriya Yoga, 59 Peters lane, 1வது பதிப்பு, பெப்ரவரி 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).
60 பக்கம், புகைப்படத் தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
போதிய நூல்விபரத் தகவல்களையோ தலைப்புப் பக்கத்தையோ கொண்டிராத நினைவுமலர். புங்குடுதீவு அமரர் நல்லதம்பி இராசக்கோன் (27.5.1951-31.1.2013) அவர்களின் நினைவு மலராக வெளியிடப்பட்டுள்ளது. கடவுள் உருவாக்கிய மதம், உலகின் முதல் மதம் இதுதானா?, இந்து மதம் அக்கா வேதம் தம்பி, இப்படித்தான் இருந்தது வேதகாலம், அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு, நிரந்தரமான அமைதியும் சந்தோஷமும், சோமபானத்தை இன்று தயாரிக்க முடியுமா? ஆகிய ஏழு கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள் யாரால் எக்காலத்தில் எழுதப்பட்டன என்ற தகவல் ஏதுமில்லை.