8135 இந்துக் கலைக் களஞ்சியம்: தொகுதி  ஒன்று: அ-ஈ.

பொ.பூலோகசிங்கம். கொழும்பு 2: இந்து சமய இந்து கலாசார அலவல்கள் திணைக்களம், இந்து சமய, இந்து கலாச்சார இராஜாங்க அமைச்சு, இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனக் கட்டிடம், 9வது மாடி, 21 வொக்சோல் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1990.(கொழும்பு 10: இம்பீரியல் பிரஸ், 25, முதலாம் டிவிசன், மருதானை).

ix, 236 பக்கம், தாடுகள், விலை: ரூபா 250., அளவு: 28.5×23.5 சமீ.

இந்து சமயத்துக்கானதொரு பல்தொகுதிகளைக்கொண்ட கலைக்களஞ்சியத்தைத் தமிழில் உருவாக்கும் முன்முயற்சியாக இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இத்தொகுதியில் அ முதல் ஈவரையிலான சைவ சமயச் சொற்களின் விளக்கங்கள் அகரவரிசையில் தரப்பட்டுள்ளன.   (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  86682).

ஏனைய பதிவுகள்