8139 கந்தபுராணச் சொற்பொழிவுகள்.

தங்கம்மா அப்பாக்குட்டி. தெல்லிப்பழை: சிவத்தமிழ்ச்செல்வி, துர்க்காதுரந்தரி, கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பிறந்தநாள் அறநிதியம், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 2வது பதிப்பு, ஜனவரி 2000, 1வது பதிப்பு, ஜனவரி 1975.(சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

xviii, 118 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

1974இல் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் மகோற்சவ  விரத காலங்களில் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின்  கந்தபுராணச் சொற்பொழிவுகள் இடம்பெற்றிருந்தன. கந்தபுராணத்தை எளியவடிவில் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும்வகையில் இச்சொற்பொழிவுகள் அமைந்திருந்தன. விரிந்த வாசகர் பரப்பின் தேவைகருதி இச்சொற்பொழிவுகள் பின்னர் நூலுருவிலும் வெளியிடப்பெற்றன. பவளவிழாவையொட்டி 2000ம் ஆண்டு மீள்பதிப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திகழ்சரவணத்தோன், பிரணவமுரைத்தோன், வேல் கைக்கொண்டோன், குன்றமெறிந்தோன், ஞானந்தான் உருவாகிய நாயகன், சூர்முதல் தடிந்தோன், குஞ்சரி மணாளன், விரதியர் முதல்வன், வள்ளிகாந்தன் ஆகிய ஒன்பது தலைப்புகளில் இச்சொற்பொழிவுகள் இடம்பெற்றுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  130240).

ஏனைய பதிவுகள்

14366 இந்து தீபம்: 1999.

இரா.ரமேஷ்சங்கர் (இதழாசிரியர்), எம்.யோகேந்திரன், எஸ். சுபாஷ் (உதவி ஆசிரியர்கள்). கொழும்பு: இந்து மன்றம், கொழும்பு பல்கலைக்கழகம், 1வது பதிப்பு,ஓகஸ்ட் 1999. (கொழும்பு: ஜெயா ஓப்செட் பிரின்டர்ஸ்). (100) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,