இளையதம்பி சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: யாழ். மாவட்ட கூட்டுறவுச் சபை வெளியீடு, 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்).
xvi, 344 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ.
உலகெங்கும் முதலாளித்துவ அச்சுறுத்தல்களினால் கோடிக்கணக்கான மக்கள் வடித்த இரத்தக் கண்ணீரில் தான் கூட்டுறவு இயக்கம் முளைவிட்டெழுந்தது. இன்று உலகெங்கும் கூட்டுறவு இயக்கம் நன்கு திட்டமிட்டு, ஒழுங்கமைத்து உருவாக்கப்பட்ட மாபெரும் பொருளாதார, சமூக, கலாசார, மக்கள் இயக்கமாக வியாபித்துள்ளது. கூட்டுறவியக்கத்தில் பல சிறப்பியல்புகள் பொதிந்துள்ளன. கூட்டுறவு இயக்கமொன்றினால் மட்டுமே உலகம் போற்றிப் புகழும் மாபெரும் சாதனைகள் பல மிக இலகுவில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை இந்நூல் தெளிவாக விளக்க முயல்கின்றது. நூலாசிரியர், தேசிய கூட்டுறவுச் சபையின் வட-கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி நிலையத்தின் இளைப்பாறிய அதிபராவார்.