8246 கூட்டுறவுப் பரிசோதகர் போட்டிப் பரீட்சை வழிகாட்டி நூல்.

தளையசிங்கம் தவசேகர். யாழ்ப்பாணம்: த.தவசேகர், 1வது பதிப்பு, ஜுலை 2012. (யாழ்ப்பாணம்: அபி அச்சகம், நல்லூர்).

205 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19.5×14.5 சமீ.

பொது உளச்சார்பு மாதிரி வினாக்களும் விடைகளும், பொது அறிவு கூட்டுறவு விடயங்களும் ஏனைய பொது அறிவு விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ள நூல். ஐக்கிய நாடுகள் சபையினால் 2012ம் ஆண்டு சர்வதேச கூட்டுறவு அபிவிருத்தி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிறுத்தி அது தொடர்பான தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. மாதிரி வினாத்தாள்கள், அதற்கான விடைகள் ஆகியவை உள்ளடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  229435).

ஏனைய பதிவுகள்

13024 கிராமிய பூபாளம் 2019: வரலாற்றைப் படித்து வரலாற்றைப் படைத்து வரலாறாகி நிற்கும் தொண்டர் திருவுக்கு அகவை 80இல் திருவுருவச் சிலை: சிறப்பு மலர்.

மலர்க்குழு. ஜேர்மனி: புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம், என்னப்பெற்றால், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (மாவிட்டபுரம்: அக்ஷதா பதிப்பகம்).44 பக்கம்இ வண்ணப்படத் தகடுகள்இ விலை: அன்பளிப்புஇ அளவு: 24.5×17 சமீ. புங்குடுதீவு