8250 தேசவழமைச் சட்டம்.

செ.செல்வகுணபாலன்;.  கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 134 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-363-1.

இந்நூல் வடமாகாணத் தமிழரின் வழக்காற்றுச் சட்டமான தேசவழமையினை விரிவாக ஆராய்கின்றது. தேசவழமைச் சட்டமானது இடம்சார் தன்மையையும், ஆள்சார் தன்மையையும் கொண்டதாகும். எனவே வடமாகாணத் தமிழர்கள் இலங்கையில் எங்கு வசித்தாலும் அவர்களுக்குத் தேசவழமையே ஏற்புடையதான சட்டமாகும். தேசவழமை யாருக்கு ஏற்புடையது என்பதையும், தேசவழமையின் கீழான வழக்காற்றுத் திருமணங்கள் என்பவற்றையும், தேசவழமையால் ஆழப்படுகின்றவர்களின் ஆதனமான முதுசம், சீதனம் மற்றும் தேடிய தேட்டம் என்பவற்றையும் பற்றித் தெளிவாக இந்நூல் எடுத்துக்கூறுகின்றது. தேசவழமைக்குட்பட்ட கூட்டுச் சொந்தக் காணிகளைக் கொள்வனவு செய்கின்றபோது ஏற்புடையதான முன்வாங்குரிமையையும் இந்நூல் தெளிவாகத் தீர்க்கப்பட்ட மாவட்ட மற்றும் உயர்நீதிமன்ற வழக்குகளை ஆதாரம்காட்டி விளக்கியுள்ளது. இந்நூல் பொதுமக்களுக்கும் சட்டம் தொடர்பிலான பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் உதவும்வகையில் எளிமையான உரைநடையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப்பட்டத்தைப் பெற்றவர். சட்டவரைஞர் திணைக்களத்தில் சிரேஷ்ட உதவிச் சட்டவரைஞராகவும், இலங்கைச் சட்டக்கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Mr Green

Content Genau so wie Eröffne Ich Ihr Spielerkonto Inside Mrbet? Free Spins In kraft sein Jedoch Für jedes Vordefinierte Spiele Tausende Spiele Zur Selektion Hierbei