சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, யுஜீ 50, பீப்பிள்ஸ் பார்க், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை).
viii, 144 பக்கம், விலை: ரூபா 380., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-685-094-3.
கற்றல், கற்பித்தலிலே எதிர்கொள்ளப்படும் இடர்களைப் பகுத்து ஆராய்தலும் அவற்றுக்குரிய தீர்வுகளைக் குவியப்படுத்தலும் கல்வி உளவியலின் சிறப்பார்ந்த முன்னெடுப்புகளாகவுள்ளன. இத்துறையில் நிகழ்ந்துவரும் அண்மைக்காலத்தைய ஆய்வுகளை அடியொற்றி இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இடர் தழுவிய கற்போர், கற்போர் அனுபவிக்கும் தாழிகை, ஒடுக்கப்பட்டோரும் கல்வியும், வகுப்பறைகளில் நிகழும் பிறழ்வு நடத்தைகள், மாணவர்களும் தொடுபயமும், உளமூட்டக் குலைவு, இடர் தழுவிய கற்போரும் நெருக்கீடுகளும், ஆளுமைக் குலைவு, ஒத்துணர்வு, கற்பித்தலைத் திட்டமிடல், ஆசிரியரும் சீர்மிய நடவடிக்கைகளும், தழுவல் போதனாமுறைமை, தனியாளைக் குவியப்படுத்தும் போதனாமுறைமை, கற்றல் உபாயங்கள், கற்றல் திறன்களை வளப்படுத்தல், நேரடியான போதனை நடவடிக்கைகள், வகுப்பறை முகாமைத்துவம், உளநிலையமைவு: சவால்களும் தீர்வு முனைப்பும், கற்றல் தொடர்பான இடர்களை எதிர்கொள்வோர், உளத்தாக்கங்களுக்கு உள்ளான மாணவர்களும் மீட்புக்குரிய கற்பித்தலும், தத்தளிக்கும் மாணவரும் பெரும்போதனையும், கல்வித் தலைமைத்துவம், சிந்தனை உளவியல்: சிந்திப்பதற்காக கற்றலும் கற்பித்தலும், ஆசிரியரும் நெருக்கீடும், போரின் வடுக்களும்கற்பித்தல் முறையும் ஆகிய 25 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.