8303 பழமொழிப் பெட்டகம்: நம்நாட்டு, பன்னாட்டுப் பழமொழிகள், பொன்மொழிகள்.

ஆசையர் நடராசா. சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஜுலை 2012. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).

344 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-93-81322-06-2.

இருபிரிவாகத் தொகுக்கப்பெற்றுள்ள இப்பழமொழித் தொகுப்பின் முதற் பிரிவில் ஈழத்துப் பழமொழிகள், பன்னாட்டுப் பழமொழிகள் என ஏராளமான பழமொழிகளைத் தொகுத்திருக்கின்றார். இரண்டாம் பிரிவில் பழமொழிகளாகக் கைக்கொள்ளத்தக்க திருக்குறள், நீதிநூற் கருத்துக்கள், புத்தரின் போதனைகள், நபிகள் நாயகத்தின் போதனைகள், யேசுநாதரின் பத்துக்கட்டளைகள், கம்பன், சுவாமி விவேகானந்தர், சுப்பிரமணிய பாரதியார், கவிமணி தேசிக விநாயகம்பினள்ளை ஆதிசங்கரர் போன்றோரின்  அறிவுரைகளும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. 1930ஆம் ஆண்டு அச்சுவேலியில் பிறந்த இவர் புலோலியில் தனது திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டவர். எழுதுவினைஞர் சேவையில் இணைந்து இலங்கையின் பல பாகங்களிலும் அரச திணைக்களங்களில் பணியாற்ற ஒய்வுபெற்றவர். சனசமூக நிலையம், புலோலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் அகியவற்றின் மூலம் சமூக சேவையாற்றியவர்.

ஏனைய பதிவுகள்