த.துரைசிங்கம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஏப்ரல் 2007. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
167 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 955-1013-92-1.
தேசிய கல்வி நிறுவகத்தின் 2007ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்திற்கமைய தரம் 10 தமிழ் பாடநூலில் உள்ள 12 பாடங்களையும், தமிழ் இலக்கியத் தொகுப்பு தரம் 10 நூலில் உள்ள பாடங்களையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பெற்ற நூல் இது. பகுதி ஒன்றில் பல்தேர்வு வினாக்களும், பகுதி இரண்டில் கட்டுரை, கடிதம், சுருக்கம் முதலியனவும், பகுதி மூன்றில் இலக்கிய வினா-விடைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் செயற்பாட்டினைத் தூண்டும் வகையில் பல்வேறு செயல்முறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. துரித மீட்டலுக்கும் இந்நூல் துணைபுரிகின்றது.