எஸ்.எல்.எம்.மஹ்ரூப். ஹன்தெஸ்ஸ: மக்ஸ்புறோ பப்ளிக்கேஷன், 132 ஏ, தவுலகல்ல, தும்பலாங்க, 1வது பதிப்பு, ஜுலை 2012. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
340 பக்கம், சித்திரங்கள், வர்ணப்படங்கள், விலை: ரூபா 650., அளவு: 20.5×15 சமீ.
இலங்கை, இந்திய, ஐரோப்பியக் கலை வரலாறுகளை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ள இந்நூல் புதியபாடத்திட்டத்தின்கீழ் பயிலும் தரம் 10 முதல் 13 வரையிலான மாணவர்களுக்குரியது. இலங்கையின் கலை வரலாறும் அதன் வளர்ச்சிக்கு ஏதுவான பின்னணியும், சிற்பம் ஓவியம் செதுக்கல், கட்டட நிர்மாணக் கலை வளர்ச்சிக் காலங்கள் (அனுராதபுரக் காலம், பொலந்நறுவைக்காலம், தென் மேல் இடப்பெயர்வு, கண்டி, கொழும்பு), தாதுகோபங்களின் வடிவங்கள், தாதுகோபங்களின் பாகங்கள், இலங்கையில் பிரதான தாகபைகள், புத்தர் சிலைகள், புத்தர் சிலையின் முத்திரைகள், இலங்கையின் பிரதான புத்தர் சிலைகள், பொலந்நறுவைக்கால புத்தர் சிலைகள், இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட கால சுவரோவியங்கள், அனுராதபுரக்கால சுவரோவியங்கள், பொலந்நறுவைக்கால ஓவியங்கள், செதுக்கல்கள்-பிரதான கலைப் படைப்புகள், பொலந்நறுவைக்கால கலைப் படைப்புக்கள், இந்து சமயக் கலைப்படைப்புக்கள், பொலந்நறுவைக்காலச் செதுக்கல்கள், யாப்பஹ{வ கம்பளை கண்டிக் காலத்துச் செதுக்கல்கள், ஏனைய இடங்களில் காணப்படும் முக்கியமான கலைப்படைப்புகள், தற்காலக் கலைப்படைப்புகள் காணப்படும் பிரதான இடங்கள் (பொரல்லை கோதமி விகாரை), இலங்கையில் பௌத்த சமயம் சாராத ஏனைய சமயக் கலைகள், இலங்கையின் பிரதான ஓவியர்கள், ஓவிய-சிற்ப ஆராய்ச்சியாளர்கள், இந்தியாவின் கலை வரலாறும் கலாச்சாரப் பின்னணியும், அஜந்தா ஓவியங்கள், நைல்நதிக்கரைக் கலைகள், ஐரோப்பியக் கலை வரலாறு, கிரேக்கக் கலைகள், பைசாந்தியக்கலைகள், ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கால ஓவியர்கள், ஓவியத்தில் ஒளியியல்வாதக் கோட்பாட்டுக் கலைஞர்கள், நிழலியல்வாதக் கலைஞர்கள், கனவடிவ வாதக் கலைஞர்கள், யதார்த்த வாதக் கலைஞர்கள் ஆகிய 34 தலைப்புகளில் இந்நூல் விரிவான தகவல்களைத் தருகின்றது.