8388 அரங்கக் கட்டுமானம்: 13ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதி தமிழ் அரங்கை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு.

க.திலகநாதன்.  கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xvii, 126 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-370-9.

அரங்க வரலாறு என்பது ஒரு இனத்தின் அல்லது குழுமத்தின் பண்பாட்டு வரலாற்றில் மிகமுக்கியமான கூறுகளில் ஒன்று.  அரங்கின் வகைகளும் தன்மைகளும் ஒரு சமூகத்தின் சமூக அமைப்பையும் சிந்தனைகளையும் காட்டும். தமிழ்நாட்டு ஈழத்தமிழரின் சமூக அமைப்பையும் சிந்தனைகளையும்அவ்வந்நாடுகளிலிருந்து எழுந்த அரங்கவியல் நூல்களின் ஊடாக, அறியலாம். அதிலும் இந்நூல் அரங்கக் கட்டடக்கலை பற்றிக் கூறுகின்றது. இந்நூலில் கி.பி.13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியை மையமாக வைத்துக் கிடைக்கும் இலக்கிய, கல்வெட்டு ஆதாரங்களையும்,  சிற்ப ஓவியங்களில் கிடைக்கப்பெறும் சான்றுகளையும், துணையாகக் கொண்டு உலக, அரங்கக் கட்டடக் கலையின் வரலாற்றையும் பண்புகளையும் வெளிக்கொணர திலகநாதன் முயன்றுள்ளார். நாடகம் வேறு, அரங்கு வேறு. நாடகம் நிகழ்த்தப்படும் ஒன்று. அரங்கு நிகழ்த்தப்படும் இடமும் சூழலுமாகும். அரங்கின்றி நாடகம் இல்லை. இவ்வகையில் இந்நூலின் வருகை எமக்கு மிக முக்கியமாகப் படுகின்றது. இந்நூல் அரங்கக் கட்டடம், உலகப் பின்புலத்தில் அரங்கும் அதன் ஆக்கமும், தமிழ்நாட்டின் அரங்கு, தமிழ்நாட்டின் அளிக்கைகள் ஊடாக தெரியப்பெறும் அரங்குகள், முடிவுரை ஆகிய ஐந்து இயல்களில் எழுதப்பெற்றுள்ளது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தைச் சிறப்புப்பாடநெறியாகப் பயின்றவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் துறையில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றவர். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்