8391 எதுவரை: தமிழ் நாடகம் , குறும்பட விமர்சனங்கள்.

சுப்பிரமணியம் வரதகுமார். வவுனியா: சண்முகலிங்கம் கல்வியியல் அரங்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2008. (வவுனியா: ஒன்லைன் அச்சகம்).

76 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-51051-0-1.

சு.வரதன் நாடகத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். வவுனியாவில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தில் பணியாற்றுகின்றார். நாடக விமர்சனத்துறையைத் தன் ஊடக ஆளுமையினூடாக ஆவணப்படுத்துவதில் தன்னை நிலைநிறுத்திவருபவர். க.ஸ்ரீகந்தவேள், தி.சிவகுமாரன் ஆகிய ஆசிரியர்களுடன் இணைந்து சண்முகலிங்கம் கல்வியியல் அரங்கு என்ற அரங்கியல் அமைப்பை வவுனியாவில் அமைத்து கல்வியியல் பணியில் அரங்கின் பிரயோகங்களை ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டு வருகின்றார். இவர் எழுதிய அண்மைக்கால தமிழ் நாடக, குறும்படங்களின் விமர்சனங்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது. இதில் முடக்கம், நல்லதோர் வீணை செய்ய, சிகப்பு விளக்கு, மேலும் கீழும், பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள், தாயுமாய் நாயுமானார், ஒரு தேசம் துயிலெழுகின்றது, செருப்பு, ஏக்கம், ஏக்கம் தரும் உணர்வுகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட விமர்சனங்கள் இவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  199556).

ஏனைய பதிவுகள்