ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஜுலை 2012. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).
vi, 28 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52535-7-4.
பத்து முதல் பதினான்கு வயதுக்கிடைப்பட்ட பெண்பிள்ளைகளை மனதிற்கொண்டு உருவாக்கப்பட்ட 27 சிறுவர் பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எளிமையான மொழிநடையில் விண்வெளி, நில நடுக்கம், இயற்கை விநோதம், மற்றும் வானவில் போன்ற விடயங்களை எடுத்தாளப்பட்டு எழுதப்பட்ட பாடல்கள் இவை. சூரிய குடும்பம் உருவான கதை, நிலநடுக்கம் எவ்வாறு ஏற்படுகின்றது, அதனால் ஏற்படும் விளைவுகள், தாவரங்களின் முக்கியத்துவம் என்ன என்பன போன்ற அறிவியல் கேள்விகளுக்கு சிறுவர்களுக்குப் பாடல்களினால் விளக்கம் தந்துள்ளார் ஆசிரியர். பெரும்பாலான பாடல்கள் ஆண்-பெண் இருபாலாருக்கும் பொதுவானவை. தங்காய் ஓடிவா, எங்கள் செல்வம், தொப்புள்கொடி உறவு, அறிந்துகொள், பெருவெடிப்பு, சிந்தையில் கொள்வோம், வான்வெளி, யார்செயல்?, நாம் தங்காய், நில நடுக்கம், பூமிப் பந்தைச் சுமப்பது, இயற்கைச் சூழல், உயிரினம், உழைப்பு, இயற்கை விநோதம், வீட்டுத் தென்னை, தோற்றப்பாடு, பள்ளிநாட்கள், நாராய் நாராய், சூரியன், வானவில், அழகுப் பூக்களில் அற்புதம், கதையும் விதையும், புரிந்துகொள், அதிசயங்கள், தாவரவகை, வேர்கள் ஆகிய தலைப்புகளில் இப்பாடல்கள் அறிவுக்கு விருந்தாகப் படைக்கப்பட்டுள்ளன.