8417 பாட இனிக்கும் பாடல்கள்.

ச.அருளானந்தம். திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  ஜனவரி 2011. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).

iv, 38 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-98211-1-3.

தனது முன்னைய பாடல் தொகுதிகளில் இடம்பெற்றிருந்த சிறந்தவையும், விருப்பத்துக்குரியவையுமான 35 பாடல்களைத் தேர்ந்தெடுத்து  இத்தொகுப்பை ஆசிரியர் வெளிக்கொணர்ந்துள்ளார். எனது குடும்பம், அக்காவின் குடை, பட்டம், பலூன், வானவில், அதிசயம், பயணம், பறவைகள், காகமும் தம்பியும், சுந்தரியின் ஆட்டுக்குட்டி, முதியோரை மதிப்போம், யானையும் எறும்பும், எங்கள் நாடு, ஐம்பொறிகள், திக்குமுக்குத்தாளம், வரவேற்கின்றோம், உடலுறுப்புக்கள், பாட்டியின் பசு, வெப்பத்தின் செயல், மும்மொழி கற்போம், எது வீரம், அழகுமலைச் சாரல், பயிர் செய்வோம், தாவரம், தெரிந்துகொள், சின்ன ரோஜாவே, அழகு பொங்கும் வீடு, நட்சத்திரங்கள், தினம் உழைப்போம், காகமும் பசுவும், ஆடும் பொம்மை, குளம், மிருகங்கள், காலை வணக்கம், வீடு செல்வோம் ஆகிய தலைப்புகளில்  எழுதப்பட்ட 35 பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்