8447 புத்தியுள்ள எறும்புகள்.

ஆலையூரன் க.தங்கராசா. திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  ஜுலை 2011. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).

v, 44 பக்கம், சித்திரம், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52535-4-3.

கல்வித்துறையில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர் அமரர் கந்தையா தங்கராசா. ஆலங்கேணி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆரம்பக் கல்வியை ஆலங்கேணியிலும் பின்னர் மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் கற்றவர். இலங்கை கல்வி நிர்வாகசேவையில் இணைந்து மூதூர், திருக்கோணமலை, வவுனியா வடக்கு ஆகிய கல்வி வலயங்களில் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். இலகுநடையில்  இவரால் எழுதப்பெற்ற ஆறு சிறுவர் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. நன்றியுள்ள ஓநாய்க்குட்டி, ஆபத்தில் உதவிய கீரிப்பிள்ளை, புத்தியுள்ள எறும்புகள், தப்புச் செய்த பூனை, காட்டில் நிகழ்ந்த ஆடல்பாடல், அன்பு நண்பர்கள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்