8472 ஸ்ரீ வில்லிபுத்தூராழ்வார் இயற்றிய மகாபாரதம்: புட்பயாத்திரைச் சருக்கம்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆழ்வார் (மூலம்). சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, 1948. (சுன்னாகம்: திருமகள் அச்சகம்).

xiii, 82 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21.5×14 சமீ.

வடமொழியில்  எழுதப்பட்டிருந்த மகாபாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர்களுள் வில்லிபுத்தூராழ்வார் என்ற வைணவப் பிராமணரே சிறப்புப்பெற்றவர். (வைஷ்ணவ ஆழ்வார் பன்னிருவருள் ஒருவரான, திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த வில்லிபுத்தூர் ஆழ்வாரின் பெயரே இவருக்கும் சூட்டப்பட்டது) திருப்பகழ் பாடிய அருணகிரிநாதரும் வில்லிபுத்தூரரும் சமகாலத்தவர். கோயம்புத்தூரில் சனியூர் என்ற இடத்தைச் சேர்ந்த இவர், கி.பி.15ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து மறைந்தவர். இவர் வழங்கிய வில்லிபாரதமே சொற்சுவை, பொருட்சுவை கொண்டதென ஆன்றோர் எடுத்தாழ்வர். மகாபாரத வரலாறு, புட்ப யாத்திரைச் சருக்கச் சுருக்கம், நூலாசிரியர் வரலாறு, புட்ப யாத்திரைச் சருக்கம் (உரையுடன்) ஆகிய நான்கு விடயத் தலைப்புகளின்கீழ் இந்நூல் அமைகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  117710).

ஏனைய பதிவுகள்

Lucky beste mobile casino Signora Charm

Content Aktuelle Spielautomaten Kostenlos Vortragen Please Enter Your Year Of Birth Lucky Signora Charm Angeschlossen Echtgeld Ended up being wird durch runde wann pu programir