கமலசுதர்சன். பருத்தித்துறை: அம்பிகை வாசம், பிராமணர் ஒழுங்கை, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (பருத்தித்துறை: எஸ்.பி.எம்.பிரின்டர்ஸ், வீ.எம்.வீதி).
(12), 76 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14 சமீ.
மௌனமே வாழ்வாக என்ற தனது முதலாவது கவிதைத் தொகுதியுடன் இலக்கிய உலகில் தடம்பதித்த கமல சுதர்சனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இதுவாகும். சமகால வாழ்வின் இறுக்கங்களுக்கிடையே மானுடம் தேடப் புறப்பட்டவையாக இவரது கவிதைகள் சோபிக்கின்றன. பருத்தித்துறையில் தும்பளைக் கிராமத்தைச் சேர்ந்த கமலநாதன் சுதர்சன் 9.5.1989இல் பிறந்தவர். தும்பளை சிவப்பிரகாச மகாவித்தியாலயம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்.