தேவ அபிரா. தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை 600005: மணி ஓப்செட்).
96 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81969-46-5.
தேவ அபிராவின் கவிதை மொழி எளிமையானது. அழகும் தெளிவும் கொண்ட நளினமும் அதேவேளை திசை தேடும் ஆர்வமும் வேகமும் கொண்டது. நேரடியாகவே அதில் இறங்கி அதன் குளிர்மையை, ஓட்ட வேகத்தை, ஆழத்தை, எளிமையை உணர்ந்தபடியே அள்ளிப்பருக முடிகின்றது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து நெதர்லாந்தில் நோய்நிர்ணய எக்ஸ் கதிர்த் தொழில்நுட்பவியலாளராகப் பணிபுரிந்துவரும் தேவ அபிரா 1988 முதல் 1993 வரை யாழ் நாடக அரங்கக் கல்லூரியிலும், விடுதலைக்கான அரங்கிலும் அரங்கச் செயலாளராகச் செயற்பட்டுள்ளார். 1995க்கும் 2000க்குமிடையில் சரிநிகரின் பத்தி எழுத்தாளராகவும் 2008இலிருந்து குளோபல் தமிழ் நியுஸ் இணையத்தளத்தில் கவிதைகள், கட்டுரைகளை எழுதி வருபவதுடன் மொழிபெயர்ப்புகளையும் மேற்கொண்டு வருகிறார்.