8502 ஒற்றைச் சிலம்பு.

மாதுமை. சென்னை 600018: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (சென்னை 600005: மணி ஆப்செட்).

63 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 18×11.5 சமீ., ISBN: 978-81-908140-6-5.

இலக்கியப் பரப்பில் கவனத்தைப் பெற்றுவரும் ஈழத்துப் படைப்பாளி மாதுமையின் தூரத்துக் கோடை இடிகள் என்ற சிறுகதைத் தொகுதி மிறிங்குவ என்ற தலைப்பில் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலும் பின்னர் திருக்கோணமலையிலும் வாழ்ந்த இவர் பின்னர் புலம்பெயர்ந்து சுவிஸ் ஜெனீவா பல்கலைக்கழகங்களில் ஆய்வாளராக இயங்குகின்றார். பெண்ணியக் கருத்துக்களை முன்னிறுத்தி எழுதிவரும் இவர், எழுத்தாளர் த.சிவசுப்பிரமணியத்தின் (தம்பு சிவா) மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கவிதைத் தொகுதி மாதுமையின் பெண்ணியம் சார்ந்த 35 கவிதைகளைக் கொண்டது. எளிமையான மொழியில் பேசி நிற்கும் இவரது கவிதைகள் யதார்த்தமானவை. ஆழமான வாசிப்புக்கு உட்படுத்தவேண்டிய பெண்ணியம் பேசும் இவரது கவிதைகளின் வீச்சு பெண்ணியப் படைப்புகளில் புதியதோர் வீச்சாகத் திகழ்கின்றது. மாதிரிக்கு ஒரு முத்து:  ப்ராண்ட் நேமில் என்ற கவிதை-வயோ கொம்பியூட்டர்/சம்சுங் டீவீ/சொனி கமரா/ நோக்கியா தொலைபேசி/ இதைவிடவும் வேறு  என்ன வேண்டும்/ ப்ராண்ட் நேமில்/ஒரு நைக் டீ சேர்ட்டும்/ சைவ வேளாள பெண் ஒன்றும்.

ஏனைய பதிவுகள்

Book Of Ra Deluxe Spielautomat Bei Novomatic

Content 100 kostenlose Spins kein Einzahlungscasino – Fazit: Spielautomaten Tricks Für Book Of Ra? Fehlanzeige! Pokerstars Casino Nachfolgende folgenden Erfahrungen über Book of Ra Deluxe

15080 பௌத்தமும் கிறிஸ்தவமும்: இலங்கையில் 1805-1838 காலப்பகுதியில் கிறிஸ்தவ மிசனரிகள் பௌத்தத்தை எதிர்கொண்டமை.

எலிசபெத் ஜே. ஹரிஸ் (ஆங்கில மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது