8514 காசி ஆனந்தன் நறுக்குகள்: இரண்டாம் தொகுப்பு.

காசி ஆனந்தன். சென்னை: காசி ஆனந்தன், காசி ஆனந்தன் குடில், 4/202 ஈஸ்வரன் கோவில் தெரு, தையூர், கேளம்பாக்கம் 603103, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (சென்னை 600005: பாரதி அச்சகம்).

120 பக்கம், ஓவியங்கள், விலை: இந்திய ரூபா 100., அளவு: 18×12 சமீ.

ஓவியர் வீரசந்தானத்தின் கருத்தோவியங்களுடன் இணைந்த காசி ஆனந்தனின் நறுக்குக் கவிவரிகள். தாய்மண் பற்று, போர்க்குணம், விடுதலை வேட்கை, சிந்தனை ஆற்றல், மொழி ஆளுமை, இலக்கிய வளம், கொள்கைப் பிடிப்பு மானிட நேயம் என்பன இந்நூலின் வரிகளில் காணமுடிகின்றது. பல்வகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான ஓர் இலக்கியனின் பெருமூச்சுப் பதிவு. “நறுக்கென நான்கு சொல் கூறிவிட்டுப் போகிறான்” என்னும் சொற்றொடருக்கு ஏற்ப நறுக்கென மனதில் தைக்கும் நான்கு வார்த்தைகளே இந்த இலக்கிய வகையாகின்றது. சிலுவை என்ற நறுக்கு மாதிரிக்கு ஒன்று: 

அறை வாங்கினேன்/மறு கன்னத்திலும்/ஏசுவே/ இனி என்ன செய்ய?

ஏனைய பதிவுகள்

Reel Steal Kostenlos Spielen

Content Die Besten Spielentwickler: game of gladiators Slot -Bonus Book Of Ra Video Video Slots Erfahrung Des Slotozilla Teams Playamo Casino Hier nun die –