மேழிக்குமரன். (இயற்பெயர்: க.அருந்தவராசா). ஜேர்மன்: தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்).
70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
ஆசிரியரின் சுமார் 250 குறுங்கவிதைத்துளிகளின் தொகுப்பு. சில ஹைக்கூ வடிவிலும், சில குறும்பா வகையிலும் அடியொற்றி புதுக்கவிதைகளாக அமைந்துள்ளன. சில விடுக(வி)தைகளாகவும் அமைந்துவிடுகின்றன. குரல் என்ற தலைப்பிட்ட கவிதை ‘பாடுபட்டுப் பக்குவமாய்/கூடுகட்டத் தெரியாது/ஆனாலும்/ஈடுகட்ட முடியாத/குரல் எனக்கு’ என்றமைந்து குயிலை விடுகவிதைக்கு விடையாக்குகின்றது. இளவாலையைச் சேர்ந்த நூலாசிரியர் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் சோஸ்ற் நகரில் வாழ்பவர். ஜேர்மனியில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜேர்மன் தமிழ் கல்விச் சேவையில்இணைந்து நாவலர் தமிழ் பாடசாலைமூலம் புலம்பெயர்ந்த தமிழ்ச்சிறார்களின் தமிழ்வளர்ச்சிக்கு உதவிவருபவர்.