சோலைக்கிளி (இயற்பெயர்: உதுமாலெவ்வை முகம்மது அத்தீக்). தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை 600005: மணி ஓப்செட், திருவல்லிக்கேணி).
87 பக்கம், விலை: இந்திய ரூபா 75., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81969-45-8.
நிலைத்திருக்கும் எல்லாவற்றின் பின்னும்-அது அரசியலாகவோ, இலக்கியமாகவோ, சமூக, தனிமனித வாழ்வாகவோ இருக்கலாம்- உள்ள தோற்ற உண்மையைச் சந்தேகிக்கின்றன இந்தக் கவிதைகள். அனுபவமோ அறிவுரையோ எதுவானாலும் இருக்கலாம். அவற்றின் ஆழத்திலுள்ள நிஜத்தைத் தேடி ஆராய்கிறார் கவிஞர். இந்த இரண்டு நிலைகள் ஒன்றிணையும் புள்ளியில் தான் இந்தக் கவிதைகளின் உலகம் இயங்குகின்றது. அந்த உலகம் எளிமையானது. அதே சமயம் பிரத்தியேகமானது. அந்த உலகில் கேட்கும் மொழி இயல்பானது. அதே சமயம் சிக்கலானது. எளிமையைச் சிக்கலானதாகவும் முரண்களை இயல்பானதாகவும் தன் கவிதைகளில் முன்வைப்பவர் சோலைக்கிளி. இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் இதனைப் பரவலாகத் தரிசிக்க முடிகின்றது.