ரி.தயாநிதி. பிரான்ஸ்: ரி.தயாநிதி, தமிழ் விசை டொட். கொம், 8, Rue Des Jardiniers, 93240 Stains, 1வது பதிப்பு, 2011. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை).
144 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
ஐரோப்பிய ஊடகங்களில் பிரகாசித்துவரும் கலைஞர் ரி.தயாநிதியின் கவிதைத் தொகுதி இது. இவரது கவிதைகள் படிப்போர் மனதில் நற்பண்புகளை விதைக்கவும், அவர்களிடையே போராட்ட குணத்தை வளர்க்கவும், உண்மைக் காதலை உணர்த்தவும், வெல்வதற்கான உத்வேகத்தை அளிக்கவும், மண்ணையும் மக்களையும் கண்முன்னே நிறுத்திப் பார்க்கவும் வாய்ப்பளிக்கின்றது. ரி.தயாநிதி – அப்புக்குட்டி புகழ் ரி.ராஜகோபால் அவர்களின் இளைய சகோதரராவார்.