கீர்த்தி (இயற்பெயர்: குமரேஸ்வரன் கீர்த்திசிங்கம்). லண்டன்: குமரேஸ்வரன் கீர்த்திசிங்கம், 1வது பதிப்பு, 2010. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).
x, 430 பக்கம், விலை: இந்திய ரூபா 165., அளவு: 17.5×12 சமீ.
திரைப்படமாகத் தயாரிக்கும் நோக்கோடு எழுதப்பட்ட காங்கேயன் நாடகத்தின் திரைக்கதையின் நூலுரு இதுவாகும். கலைத்துறைப் பாரம்பரியத்தில் வந்த குமரேஸ்வரன் (கீர்த்தி) முன்னர் அரங்க நாடகங்களைப் பயன்படுத்தி மாணவ சமூகத்தின் மத்தியில் பொது உடைமைக் கொள்கைகளையும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் வெளிக்கொணர்ந்த ஆசிரியர் கீர்த்திசிங்கம் (கீத்தி மாஸ்டர்) அவர்களின் மகனாவார். லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் இவர் அங்கு திரைப்படத்துறையில் ஈடுபாடுகொண்டு பணியாற்றுபவர்.