8564 வாத்தியார் மாப்பிள்ளை காவியம்.

ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (தெகிவளை: A J Prints).

xxxii, 311 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-54039-1-7.

கவிஞர் கலாநிதி ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வழங்கியுள்ள எட்டாவது காவியம் இதுவாகும். இது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  சின்ன மக்கா எனப்பெயர்பெற்ற, மருதமுனைக் கிராமத்தைக் கதைப்புலமாகவும், அப்பகுதி மக்களின் பேச்சு வழக்கினைப் பரவலாகவும் கொண்டும் எழுதப்பெற்றுள்ளது. மருதமுனை மண்ணில் வாழையடி வாழையாக வழக்கிலிருந்து வரும் திருமணம், அதனோடு கூடிய சடங்குகள், சம்பிரதாயங்கள், சுன்னத்துக் கல்யாணம், மீன்பிடித் தொழில், அதனோடிணைந்த சமூகவியல் என்பனவற்றை இழைத்து வடிக்கப்பெற்ற அழகானதொரு காப்பியமாகும்.

ஏனைய பதிவுகள்