8571 ஆத்மாவின் ஓசை.

எஸ்.அமலஜீனு. ஹட்டன்: ஜீன் பிக்சேர்ஸ்,  இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்).

ix, 84 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ.

இந்நூலில் கண்ணீர், சமுத்திரங்களில், சருகாகிய பூக்கள், ஆத்மாவின் ஓசை, மாய வலை, கண்ணீர்ப் பூக்கள், துல்லியம் காணவேண்டிய தூர்கள், உயிருள்ளவரை உங்களைத் தானே, சேமலாபம், வெளிச்சத்தின் பச்சையங்கள், விடியலை நோக்கி ஆகிய பதினொரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. தொன்னூறுகளில் இடப்பெயர்வின் இன்னல்களில் இந்திய தேசத்தில் பிரசவிக்கப்பட்ட நெய்தல்சாரல் கலைஞர் ஜீன்ஸ் காலமாற்றங்களில் ஓரங்கட்டப்படும் ஆத்மாக்களுக்கான ஆதங்கமாக இச்சிறுகதைத் தொகுப்பில் சோககீதம் இசைத்துள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  222910).

ஏனைய பதிவுகள்