சிற்பனை கீதா கணேஷ் (இயற்பெயர்: க.லோககீதா). யாழ்ப்பாணம்: இலக்கிய மன்றம், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, நவம்பர் 2011. (யாழ்ப்பாணம்: கணபதி பிரிண்டர்ஸ்).
xiv, 96 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12 சமீ., ISBN: 978-955-53979-0-2.
நிவேதிதா, ராதிகா, கீதா கணேஸ், முதலான புனைபெயர்களில் எழுதிவரும் சிற்பனை கீதா கணேஷின் முதலாவது சிறுகதைத் தொகுதி இது. கதாசிரியரது பல்கலைக்கழக வாழ்வில் தன்னைச்சூழ நிகழ்ந்த சம்பவங்களின் பாதிப்புகளே இக்கதைகளாக உருக்கொண்டுள்ளன. போர்ச் சூழல் தந்த வடுக்கள், புலம்பெயர் வாழ்வு மற்றும் தாயக வாழ்வின் பல்வேறுவிதமான அவலங்கள், சமகால வாழ்வியல் சூழல், முதுமை வாழ்வு, என விரிந்து செல்கின்றன. பல்வேறு மனிதர்களை வெவ்வேறு சூழல்களில் சித்திரிக்கும் கீதாவின் மொழிநடை அனுபவ படைப்பாளிகளின் மொழிநடைக்குச் சற்றும் சளைத்ததல்ல. இந்நூலில் கற்பூர வாசனை, கனவுகள் ஈடேறும், யார்க்கெடுத்துரைப்பேன், பாகற்காய், எத்தனங்கள், இருப்பைத் தேடி, மடிப்பிச்சை, தொலைபேசி, நெஞ்சு பொறுக்குதில்லை, நிறத்தின் விலை, அவள் அழவேயில்லை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 11 கதைகள் இடம்பெற்றுள்ளன.