8587 ஒரு பாதையின் கதை.

குப்பிழான் ஐ.சண்முகன். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை 600005: மணி ஓப்செட்).

120 பக்கம், விலை: இந்திய ரூபா 95., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81969-38-0.

இளமைக்கேயுள்ள உள்ளக் கிளர்ச்சியையும், உணர்வுக் கொந்தளிப்பையும் கருப்பொருளாகக் கொண்ட சண்முகனின் கதைகளின் ஊடும் பாவுமாக இருப்பவை கனவுகளும், துயர நினைவுகளுமேயாகும். காட்சித் தன்மையும், கற்பனாவாத இயல்பும், உணர்வுநயப் பாங்கும் ஒருங்கேயமைந்த அவரது மொழி இக்கதைகளை துல்லியமான நீர்வண்ண ஓவியங்களாக மாற்றிவிடுகின்றது. சில வண்ணங்கள் மாத்திரம் மிகுதியாக உபயோகிக்கும் ஓர் ஓவியனைப் போல இவரும் உள்ளத்தெறிப்பின்பாற்பட்ட சில உணர்விழைகளை மட்டுமே திரும்பத் திரும்ப மீட்டிப் பார்த்திருக்கிறார். அவரது  கைவண்ணத்தில் அமைந்த 15 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. தலைமன்னார் ரெயில், இருளிலிருந்தே ஒளி பிறக்கிறது, அரியத்தின் அக்காவுக்கு, வேட்டைத் திருவிழா, தடங்கள், நான் சாகமாட்டேன், உலகம் பரந்து கிடக்கிறது, மாற்றங்கள், ஒரு பாதையின் கதை, இலுப்பை மரமும் இளஞ்சந்ததியும், உடைவுகள், கனவு, பருவந் தவறிய மழையைப் போல, தரு, சிதம்பரம் ஆகிய தலைப்புகளில் வெளிவந்த கதைகள் இவை.

ஏனைய பதிவுகள்

Wonder Girl Gold Video slot

Blogs 100 percent free Cellular Harbors On line Jackpots Tagged That have Titanic Titanic Stream And see On the web Those individuals are merely some

9159 சோபகிருது வருஷ நவராத்திரி-சிவராத்திரி விரத நிர்ணயம்.

ச.குமாரசுவாமிக் குருக்கள், எஸ்.சுவாமிநாத சிவாசாரியார், அரு.இராமநாதக் குருக்கள், க.சுவாமிநாத சிவாசாரியார் (இணைஆசிரியர்கள்). திருக்கேதீச்சரம்: சிவானந்த குருகுலம், 1வது பதிப்பு, 1964. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்). 30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.