8598 காணாமல் போனவனின் மனைவி.

வெற்றிச்செல்வி (இயற்பெயர்: வேலு சந்திரகலா). சென்னை 600078: சோழன் படைப்பகம், எண் 10, 6ஆவது தெரு, முதல் செக்டார், கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை 600078: தோழமை வெளியீடு, 5னுஇ பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர்).

80 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 18×11.5 சமீ.

மன்னார் மாவட்டத்தில் அடம்பன் கிராமத்தில் 1974இல் பிறந்தவர் வேலு சந்திரகலா.1991இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து இறுதி யுத்தம் வரை போராளியாகச் செயற்பட்டவர். 1993இல் வெடிவிபத்தில் தனது ஒற்றைக் கண்ணையும் ஒற்றைக் கையையும் இழந்தவர். 1997 முதல் எழுத்துத் துறையில் பிரவேசித்தவர். 1999 முதல் 2004 வரை புலிகளின் குரல் வானொலியில் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் செயற்பட்டவர். பெண்புலிகளின் சுதந்திரப் பறவைகள் பத்திரிகையிலும் பணியாற்றியவர். இவரது இப்படிக்கு அக்கா என்ற கவிதைத் தொகுதி கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. இலங்கைப் படையினரின் தடுப்பு முகாமில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட உயிரே உயிரே நாவல் தினமணி பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அத்துடன் இறுதி நாட்களும் எனது பயணமும் என்ற முள்ளிவாய்க்கால் யுத்தகாலப் பயணக்கட்டுரை இணையங்களில் பரபரப்புடன் வாசிக்கப்பட்டது. அது பின்னர் ஈழப்போரின் இறுதி நாட்கள் என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. வெற்றிச் செல்வி தற்போது  மாற்றாற்றல் உடையவர்களுக்காகச் செயலாற்றத் தொடங்கியிருக்கும் மன்னார் மாவட்ட தொண்டு நிறுவன அமைப்பொன்றில் பகுதிநேர கள உத்தியோகத்தராக செயற்பட்டு வருகின்றார். இவரது சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்திருக்கும் இந்நூலில் காணாமல் போனவனின் மனைவி, குங்கும கேள்வி, எதிர்பார்ப்பு, முடியாத ஏக்கங்கள், சணல் 4, சிங்கிடி 1, சலோனி, அம்மாவின் பிரச்சினை, அவளின் பிரச்சினை, சித்திரவதை, மைனாவே மைனாவே மழைவருமா, நல்ல கதை ஆகிய 12 கதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Book Of Ra Secretos

Content Alice in wonderland $ 1 Depósito – Combinación Desplazándolo hacia el pelo Características Para los Símbolos Sobre Book Of Ra Sus particulares De el

Казино 1xBet: праздник во рабочее гелиостат диалоговый игорный дом, фиксация изо бонусом без депозита

Content Закачать приложение казино 1xbet на Андроид Автомотосекция киберспортивных став в 1xBet Непраздничное зеркало 1хБет на сейчас bet зеркало Сие обеспечивает невинный а еще исполнительный