8607 சாளரம்: கதைகளும் ஆய்வும்.

மனோன்மணி சண்முகதாஸ், அருணாசலம் சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: புதுமைப்பித்தன் நூற்றாண்டு நினைவுச் சிறுகதைக் கருத்தரங்க மலர், 1வது பதிப்பு, 2007. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டர்ஸ், 70/7 கனல் வீதி, ஹெந்தளை).

188 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ.

ஈழத்தில்  புதுமைப்பித்தன் நினைவைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கோடு 25.2.2007 அன்று புதுமைப்பித்தன் நூற்றாண்டு நினைவுச் சிறுகதைக் கருத்தரங்கம் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் யாழ். ஆரியகுளம் புதிய உயர்கல்லூரியின் ஆதரவில் நடைபெற்றது. அவ்வேளையில் வ.வேசு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம், புதுமைப்பித்தனின் சாபவிமோசனம், கு.ப.ராவின் சிறிது வெளிச்சம், லா.ச.ராவின் பாற்கடல், இலங்கையர்கோனின் முதற் சம்பளம், ரஞ்சகுமாரின் கோசலை ஆகிய சிறுகதைகள் பற்றிய அறிமுக ஆய்வுகள் நிகழ்த்தி பார்வையாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது. அறிமுகவுரைகளை முறையே மனோன்மணி சண்முகதாஸ், அருணாசலம் சண்முகதாஸ், கந்தையா குணராசா, ஈஸ்வரநாதபிள்ளை குமரன், செல்லையா திருநாவுக்கரசு, மனோன்மணி சண்முகதாஸ்- கா.சிவத்தம்பி ஆகியோர் வழங்கியிருந்தனர். இந்நூல் மேற் குறிப்பிட்ட சிறுகதைகளையும் அவற்றுக்கான அறிமுக உரைகளையும் உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளது. 42 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்த புதுமைப்பித்தன் (1906-1948) தமிழ்ச் சிறுகதை மரபின் ஆரம்பகாலப் படைப்பாளிகளுள் ஒருவர். 1933இல் சாளரம் என்ற சிறுகதையுடன் தொடங்கிய அவரது இலக்கிய வாழ்வு 1948 வரை நீடித்தது. அவரது முதல் சிறுகதையின் தலைப்பையே இந்நூலின் தலைப்பாகவும் வழங்கியுள்ளனர். வெளிவாரிப் பட்டப்படிப்புப் பாடநெறிக்கு அமைவானமுறையில் இந்நூல் தொகுக்கப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்