8613 தாரணி ஓர் ஆச்சர்யக் குறி.

நெடுந்தீவு மகேஷ். (இயற்பெயர்: செல்லத்தம்பி மகேஷ்). இலங்கை ஆறுதல் நிறுவனம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2012. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரிண்டேர்ஸ், 817, ஆஸ்பத்திரி வீதி).

viii, 84 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

இலங்கைத் தமிழ்ப் பிரதேசங்களில் மாணவர்களின் கல்வி விருத்தி பற்றிய பின்புலத்தில் எழுந்த சிறுகதைகளின் தொகுப்பாக இது அமைகின்றது. வகுப்பறைகளின் பின்னணியில் அமைந்த புகைப்படங்களும் அதனோடிணைந்த இருவரிக் கருத்துக்களும் கதைகளுக்கு மெருகூட்டுகின்றன. எதையும் ஏன் எதற்கு எப்படி என்று வினாவும் மாணவர் பரம்பரை உருவாகவேண்டும் என்கிறார் ஆசிரியர். பெரும்பான்மையான கதைகள் ஆசிரிய வாண்மை விருத்திக்கு உரமிடுவதாக அமைகின்றன. கதைகள் ஒவ்வொன்றும் கொண்டுள்ள கருப்பொருள் கல்வியின்-கற்றலின்-கற்பித்தலின் மேம்பாட்டுக்கு உதவுவதுடன் கல்வித்துறை சார்ந்தோர் தம்மை அறிந்து உணர்ந்து செயலாற்றவும் எதிர்கால சந்ததியினரை சிறந்த பிரசைகளாக உயர்த்தும் வழிகாட்டும் வகை தேர்ந்தொழுகவும் தூண்டுகின்றன. தாரணி ஓர் ஆச்சர்யக்குறி, ஓர் ஆசிரியன் ஆசிரியராகிறார், ஆசிரியர் கற்கிறார், தேவை ஒரு தேடல், படித்தவள், அனுபவத் தணல்கள், எருமையும் பன்மையும், தேத்தண்ணியைக் குடிக்காமலே, ஆயுதத்தைக் கூர்மையாக்குங்கள், உதிர்வு, பரிகாரம், விடைக்கெனத் தேர்ந்த வினா, பயிரை மேயும் வேலிகள், எங்கள் வீட்ட போவம், ஊமைத் துயரங்கள் ஆகிய பதினைந்து சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Salle de jeu Un tantinet Précises

Ravi Mega Casino Gratification Sauf que Bits – emplacement sizzling hot deluxe Rendez Les bons Casinos Pour Appareil Pour Sous Du Appoint Palpable Gold Blitz