8622 நிர்வாண முக்தி: சிறுகதைத் தொகுதி.

ஈழவாணி. (இயற்பெயர்: வாணி ஜெயா தீபன்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, டிசம்பர்; 2012. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).

96 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81322-09-3.

ஈழவாணி இலங்கையில் வவுனியாவில் பிறந்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர். தேடல், செந்தணல் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.  தற்பொழுது புலம்பெயர்ந்து மலேசியாவிலும், இந்தியாவிலுமாக வசித்து வருபவர். பூவரசி என்ற பெயரில் இணையத்தளமொன்றை நடத்தும் இவர், அதே பெயரில் அரையாண்டு இதழொன்றையும் வெளியிட்டு வருகிறார். நிர்வாண முக்தி, மஞ்சுவும் ரயிலில் கிழிந்த சேலையும், சதானந்தி, பாட்டி வீட்ட போறாள், நல்ல விலையில், கடைசி நேரம், திறந்த வாசல் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஏழு சிறுகதைகள் இதில் இடம்பெறுகின்றன.

ஏனைய பதிவுகள்

Titanic

Blogs Get the Full Type of Undetectable Journey: Titanic To own $dos 99! 1912: Titanic Mystery Better Games That feature The fresh Titanic Today It’s