8644 வெள்ளி விரல்: சிறுகதைகள்.

ஆர். எம்.நௌசாத்;. தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்).

134 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80240-59-6.

இந்தக் கதைகளின் களம்-ஈழம், தாய்லாந்து, விண்வெளி. காலம்- நேற்று, இன்று, நாளையையும் கடந்து முடிவற்ற காலம். இடமும் பொழுதும் வெவ்வேறானாலும் மனிதர்கள் தமது இருப்புக்காகவும் அடையாளத்துக்காகவும்  போராடுகிறார்கள். அடயாளங்கள் சில சமயம் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்குகின்றன. வாழ்வடையாளத்திற்காகப் பல சமயம் அபாயகரமாகப் போராட நேர்கின்றது.  இந்த மானுடச் சிக்கலை முன்வைப்பவை இக்கதைகள். சுந்தரராமசாமி நினைவு குறுநாவல் போட்டியில் பரிசுபெற்ற நட்டுமையின் ஆசிரியர்  தீரன் ஆர்.எம்.நௌசத்தின் 12 கதைகள் கொண்ட தொகுப்பு இது. இக்கதைகள் தாய்மொழி, வதனமார், வெள்ளிவிரல், விட்டு விடுதலையாகி, வேக்காடு, கல்லடிப் பாலம், மீள்தகவு, காலகட்டம், தலைவர் வந்திருந்தார், நல்லதொரு துரோகம், ஸீனத்தும்மா, சாகும்தலம் ஆகிய தலைப்புகளில் அமைந்தவை. தலைப்புக்கதையான வெள்ளிவிரல், சில ஆசாட பூதிகளின் அசிங்கமான வாழ்வைச் சித்திரிப்பதுடன் மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் மக்களையும் படம்பிடித்துக்காட்டுகின்றது.  இவர் தனது கதைகளில் கையாண்டுள்ள நவீன உத்திகளும் தேர்ந்தெடுத்த வித்தியாசமான கதைக்களன்களும் பட்டவர்த்தனமான உரையாடல் மொழிகளும்  நம்மை அவரது கதைகளோடு ஒன்றிக்க வைக்கின்றன. ஆசிரியர் இலங்கை தபால் திணைக்களத்தில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

12301 – கல்வி முன்னேற்றம்: செப்டெம்பர்1997- ஆகஸ்ட் 1998.

கொள்கை திட்டமிடல் கண்காணிப்பு பிரிவு. கொழும்பு: கொள்கை திட்டமிடல் கண்காணிப்பு பிரிவு, கல்வி உயர்கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகத் திணைக்களம்). x, 250 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள்,

15277 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தொடக்கமும் வரலாறும்.

தில்லைநாதன் கோபிநாத். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). (8), 9-64 பக்கம், விலை: