செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 3(12) மெய்கை விநாயகர் தெரு, வடபழனி, 1வது பதிப்பு, டிசம்பர்; 2007. (சென்னை: சிவம்ஸ்).
174 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 18×12 சமீ.
சிவமலர் கல்லூரியில் கிறிஸ்டி தயாளனுடன் நெருங்கிப் பழகுகின்றாள். அவளது தோழி திலகம் எச்சரிக்கிறாள். சிவமலரின் தந்தை கருணாகரன்-சமயம், சாதியத்திற்கு மேலாக ஊடுருவிச் சிந்திக்கத் தெரியாதவர். அவரின் கண்டிப்புச் செயல் சிவமலரைத் திணற அடிக்கின்றது. சமயம், சாதி, நிறம், மொழிவெறி, பால்நிலை ஆகியன சுயசிந்தனை ஆற்றலைத் தடுக்கும் தூசுப் படலங்கள் எனக் கல்லூரி ஆசிரியர் வைத்தியநாதன் மூலம் சிவமலர் கற்றுக்கொள்கிறாள். மேலும் சமயங்கள், பொருள் உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியில் தங்கியுள்ளன. அவற்றின் ஏற்றம் மட்டுமல்ல வீழ்ச்சியிலும் அதுவே நிலைமையாகும் என்ற கொசாம்பியின் கூற்றையும் ஆசிரியர் வரலாற்று நோக்கோடு விளக்குகின்றார். சிவமலர் சமயங்கள் பற்றிய புத்தறிவுடன் சிந்திக்கத் தொடங்குகின்றாள்.