ஜி.நேசன் (இயற்பெயர்: ஜி.நேசமணி). கொழும்பு 14: ஜனமித்திரன் வெளியீடு, எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் ரோட், 1வது பதிப்பு, 1974.
(6), 250 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 4.90,அளவு: 17×12 சமீ.
மித்திரனில் தொடராக வெளிவந்த நாவல் இது. இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த பயங்கரக் கொள்ளைக்காரியைப் பற்றிய கதை. கொலை, கொள்ளை, பாலியல் உறவு என்பவை கதையை வளர்த்துச் செல்கின்றன. நாவலில் பட்லி மத்தியப் பிரதேசத்தின் நாஜிபாபாத் கோட்டையில் 3.3.1929இல் பிறந்தவளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 114775).