8682 பொன்னம்மாளின் பிள்ளைகள்.

பொ.பத்மநாதன். கொழும்பு: வீரகேசரி வெளியீடு, வீரகேசரி பதிப்பகம், த.பெட்டி எண் 160, 1வது பதிப்பு, ஜுன் 1979. (கொழும்பு 14: Express Newspapers Ltd., 185, Grand Pass Road)

(3), 224 பக்கம், விலை: ரூபா 5.50, அளவு: 18×12 சமீ.

“இக்கதையின் நாயகி பல ஆண்டுகளுக்கு முன்பே என் மனதில் ஒரு இலட்சியப் பெண்ணாக ஜெனித்தவள். ஆனால் சில காலத்துக்கு முன்பு மட்டக்களப்புக்குப் போய் இரு வாரங்கள் தொடர்ச்சியாக இருக்க நேரிட்டபோதுதான் உறக்க நிலையிலிருக்கும் கூட்டுப்புழு, அழகிய வண்ணத்துப் பூச்சியாக மாறுவது போல இவளின் வாழ்க்கையையும் என்னால் முழுமையாக உருவகிக்க முடிந்தது.  இரவின் ஆழ்ந்த மௌனமான சூழ்நிலையில் முழுமையாக எனது மனதை அக்கிரமித்துக்கொண்டு நிற்பாள் இவள். தன்னை அழித்தழித்து இனிமையான சுகத்தைத் தரும் ஒரு உயர்தர ஊதுவத்தியைப் போல தனது குடும்பத்திற்காகவே வாழ்ந்த இவளை எண்ணி நான் அடைந்த பெருமையும், ஆனந்தமும் கடைசியாக வடித்த கண்ணீருமே இந்நாவலாக உருவகித்திருக்கிறது.”-(ஆசிரியர் முன்னுரையில்). இது 66ஆவது வீரகேசரி பிரசுரமாக வெளிவந்துள்ள நாவல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  129253).

ஏனைய பதிவுகள்

12170 – முருகன் பாடல்: நான்காம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).