இணுவில் ஆர்.எம்.கிருபாகரன்.கனடா: கலாரஜனி கிருபாகரன், 3642 lawrence Avenue East, Scarborough, Ontario, MIG 1P6, இணைந்து வெளியிடுவோர், சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2010. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).
vi, 162 பக்கம், விலை: இந்திய ரூபா 65., அளவு: 17.5×12 சமீ.
மன்னாரில் எழில்கொஞ்சும் வனப்புமிகு வயல்கள், காடுகள் சூழ்ந்த கிராமத்து இயற்கைக் காட்சிகள் மறக்கமுடியாதவை. அத்தகையதொரு கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையே தினமும் வாழ்க்கைநடத்தும் குடும்பங்களின் பின்னணியில் கதை நகர்கின்றது. கணவனை இழந்த தாய் முத்துலட்சுமி. மகள் சண்முகப்பிரியா, சவுதியில் வாழ்வதாகக் கருதப்படும் அவளது கணவன், அவர்களது மகள் யாழினி, மற்றும் முத்துலட்சுமியின் பிற மக்களான மாறன், சேல்விழி, மாதங்கி, ஆகியோர் பிரதான பாத்திரங்கள். ஈழத் தமிழரின் அவலவாழ்க்கைக் கோலங்கள் நாவலெங்கும் கசியவிடப்பட்டுள்ளன.