பசுந்தீவு கோவிந்தன். (இயற்பெயர்: இராமநாதன் கோவிந்தன்). வேலணை: கோ.சரோஜினிதேவி, சிற்பனை முருகன் வீதி, 5ம் வட்டாரம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம்).
272 பக்கம், படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
இந்நூலில் ஆசிரியரின் மூன்று குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. வாடாத ரோசா, கனடா மாப்பிள்ளை, கானல்நீர் ஆகிய தலைப்புகளில் இடம்பெற்றுள்ள இந்நாவல்கள், யாழ்ப்பாணத்துத் தீவகச் சமூக வாழ்வினையும் புகலிடக் கற்பனைகளையும் களமாகக் கொண்டவை. கனடாவில் முரசொலியின் பார்வையில் நூலாசிரியர் பற்றிய குறிப்பும் காணப்படுகின்றது. ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான நூலாசிரியர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 2003இலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருபவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 226877).