8692 அம்பாறை மாவட்டச் சிறுகதை ஆளுமைகள்.

றமீஸ் அப்துல்லாஹ். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 162 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-659-335-8.

அறிமுகம், அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், அம்பாறை மாவட்ட சிறுகதையாளர்கள் அறுவர் பற்றிய சிறப்பாய்வு, அம்பாறை மாவட்ட சிறுகதைகளில் சமூகப் பிரச்சினைகள், ஆகிய நான்கு இயல்களைக்கொண்ட இந்நூலின் பின்னிணைப்பில் அம்பாறை மாவட்டத் தமிழ்ச் சிறுகதையாளர்களின் சிறுகதைத் தொகுதிகள்,  இவ்வாய்வில் குறிப்பிடப்பட்டுள்ள உதிரியாகக் கிடைத்த சிறுகதைகள் பற்றிய விபரங்கள், அரபுச் சொற்களும் பிரதேச வழக்குச் சொற்களும் ஆகிய மூன்று பட்டியல்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்நூல் அம்பாறை மாவட்டச் சிறுகதைகளினூடாக அம்மாவட்டத்தின் சிறுகதை வளர்ச்சியையும் அம்மாவட்டச் சமூகப் பிரச்சினைகளையும் அம்மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு சிறுகதை எழுத்தாளர்களாகத் தேர்ந்தெடுத்த அப்துஸ்ஸமது, மருதூர்க்கொத்தன்,  ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், உமா வரதராஜன், எம்.ஐ.எம்.றஊப், திருக்கோவில் கவியுவன் ஆகியோரின் படைப்புக்களின் பொருள், சமூக நோக்கு, கவர்ச்சி, ஆற்றல்கள் போன்றவற்றையும் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். றமீஸ் அப்துல்லாஹ் (1969) சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்பு கலைமாணிப்பட்டத்தையும், முதுகலைமாணிப்பட்டத்தையும் பெற்றவர். தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில்  மொழித்துறைத் தலைவராகவும், முதுநிலை விரிவுரையாளராகவும்; கடமையாற்றுகின்றார் .

ஏனைய பதிவுகள்

Alice Wikipedia

Posts What had been the newest labels of the twins inside the Alice-in-wonderland? Guide timeline Series Casting From the Empire Hearts show Queen from Minds