எஸ்.எல்.எம்.நஷ்மல். இலங்கை: அல்-மனார் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை)
(10), 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-54499-1-5.
இஸ்லாமியர்களின் வேதமொழியாகிய அரபு மொழியின் அற்புதத் தன்மைக்கு அல் குர் ஆனே முக்கிய சான்றாகும். அல்குர் ஆனின் வருகைக்கு முந்திய ஜாஹிலிய்யாக் காலப் பகுதி அரபு இலக்கியத்தில் மேம்பட்ட ஒரு காலமாகக் கருதப்படுகின்றது. தமிழ் மொழியின் இலக்கியங்களுக்கு முச்சங்கங்கள் பெரும்பணியாற்றியது போலவே ஜாஹிலிய்யாக் காலப் பகுதியிலும் சங்கங்கள் (சந்தைகள்) அமைக்கப்பெற்று மொழி பேணப்பட்டுவந்துள்ளன. சங்க இலக்கியங்கள் போன்றே அரபு இலக்கியத்திலும் அஸ்ஸப்உல் முஅல்லகாத் என்னும் ஏழு பெருங்கவிதை நூல்கள் காணப்பட்டுள்ளன. ஜாஹிலிய்யாக் கால இலக்கியங்கள் நபியவர்களின் வருகையின் பின்னரும் மதிப்புப் பெற்றிருந்தன. அவை போர், காமம், காதல் பற்றியே அதிகம் பேசினாலும் நற்பண்புகள், சமாதானம், போன்ற நற்செயல்களையும் பாடின. பிற்காலத்திலும் அவற்றிற்குச் செல்வாக்கு இருந்தது. கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்நூலாசிரியர் ஜாஹிலிய்யாக் காலகட்ட அரபு இலக்கியங்கள் பற்றி இந்நூலில் விரிவாக ஆய்வுசெய்திருக்கிறார். ஜாஹிலிய்யா என்னும் அரபுப்பதம், மொழிரீதியாக அறியாமை-மடைமை என்னும் கருத்தைத் தருகின்றது.