8712 ஒன்றுக்கும் உதவாதவன். 

அ.முத்துலிங்கம். சென்னை 600018: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்ஸ்;).

262 பக்கம், விலை:  இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81095-63-8.

ஆசிரியர் தான் சந்தித்த அனுபவங்களைச் சுவையான 58 கட்டுரைகளாக இந்நூலில் வழங்கியிருக்கிறார். அ.முத்துலிங்கத்தின் கவனஈர்ப்புக்குள்ளாகும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச்சித்திரமாக விழித்தெழும் ரசவாதம் இந்நூலில் சாத்தியமாகியிருக்கிறது. நவீன தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வீச்சையும் சேர்க்கும் எழுத்தில் பல நிகழ்வுகளை இந்நூலில் ஆசிரியர் விவரிக்கிறார். நிகழ்புலங்கள் அமெரிக்கா, கனடா, ஆபிரிக்கா, இலங்கை, ஐரோப்பா,  இந்தியா என மாறினாலும்  கதாமாந்தர்களின் மனிதநேயமும் மகிழ்ச்சியும், துயரமும், தியாகமும் மாறாமல் ஒரு தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத தருணங்களை வாசிப்பவர் மனத்தில் நீடித்து நிறுத்துகின்றன. அவரது எழுத்துக்கள் யதார்த்தத்தை மறைக்காமல் அதனை அதன் இயல்பான மந்தகதியிலிருந்து விடுவித்து விறுவிறுப்பாக்குகின்றது.  அ.முத்துலிங்கம் இலங்கையின் வடபுலத்தில் கொக்குவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின்னர் இலங்கையின் பட்டயக் கணக்காளர் படிப்பையும் இங்கிலாந்தில் ஊhயசவநசநன Chartered Management  Accountancy படிப்பையும் பூர்த்தி செய்தபின்னர் இலங்கையிலும் ஆபிரிக்காவிலும் கணக்காளராகப் பணியாற்றியவர்.  பின்னர் ஐ.நா.வுக்காக பல நாடுகளில் இத்துறையில் பணிபுரிந்து  2000இல் ஓய்வு பெற்று, தற்போது கனடாவில் குடும்பத்துடன் வாழ்கிறார்.  60களிலிருந்து எழுதிவரும் முத்துலிங்கம் தாயகத்தில் மட்டுமல்லாது புகலிடத்திலும் நன்கு அறியப்பட்ட ஒரு  ஈழத்துப் படைப்பாளி.

ஏனைய பதிவுகள்

Absa Lending options

Content Variable payment possibilities Simply no equity pressured Easy to register Zero monetary verify Absa loans are a great means for individuals that are worthy

10 Better Casinos Near Me personally

Content Live Specialist Local casino Programs And you will Cellular You’re Not able to Availableness Playmichigan Com Should i Use My personal Mobiles? Where you

14920 பாரதரத்னா இந்திரா.

கண.சுபாஷ் சந்திரபோஸ். கொழும்பு 11: மெய்கண்டான் வெளியீடு, 161, செட்டியார் தெரு, 2வது பதிப்பு, டிசம்பர் 1985, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1985. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு). (12),