8740  தேடலின் ஒரு பக்கம்: ஓர் ஆய்வியல் நோக்கு.

எம்.எம்.ஜெஸ்மி. மருதமுனை:  தென்றல் வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (அக்கரைப்பற்று: பெருவெளி).

xx, 76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-51296-0-2.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பட்டதாரியான நுலாசிரியர் 2000 ஆண்டுகளில் தினகரன் வாயிலாகப் பத்திரிகைத்துறையில் நுழைந்தவர். தினகரன், எங்கள் தேசம் ஆகிய பத்திரிகைகளில் இவர் எழுதிய ஒன்பது இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூலாகும். தான்சார்ந்த அரசியலைத் தன் கவிதைகளால் வெளிப்படுத்தியவர் ஆ.ர்.ஆ.அஷ்ரப், தமிழியல் சூழலில் பின்நவீனத்துவமும் தவறான கற்பிதங்களும், இலக்கியப்பரப்பின் பன்முகத் தன்மை ஆ.ர்.ஆ.ஷம்ஸ்,  தென்கிழக்குப் பிரதேசத்தவர்களிடமிருந்து தூரமாகிச் செல்லும் நாட்டார் பாடல்கள், மருதமுனை ஈன்ற புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன், நீக்ரோவியம் ஒரு பண்பாட்டு எதிர்ப்பின் வெளிப்பாடே, ஈழத்துச் சிறுகதையின் முன்னோடி பித்தன் கே.எம்.ஷா, அறிஞர் அல்-கஸ்ஸாலி கவிஞர் அல்லாமா இக்பால், நகைச்சுவையும் சுருக்கமும் மிக்க லிமரிக்ஸ் கவிதைகளின் தோற்ற வளர்ச்சியும் மீள் அவதாரத்தின் தேவையும் ஆகிய ஒன்பது தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்களிடம் மறைந்திருந்த ஒரு இலக்கியவாதியை வெளிக்கொண்டுவருவதாக முதலாவது கட்டுரை அமைகின்றது. தமிழியல் சூழலில் பின்நவீனத்துவமும் தவறான கற்பிதங்களும் பற்றிப் பேசுவதாக அடுத்த கட்டுரை அமைகின்றது. ஊடகவியலாளரான கவிஞர் ஆ.ர்.ஆ.ஷம்ஸ் பற்றிய கட்டுரையில் அவரது எதிர்ப்பிலக்கியக் கருத்துகள், முஸ்லிம் தேசக் கதையாடல், பண்ணாட்டு ஆசாரங்களைப் பாதுகாக்கும் ஆர்வம் என்பவற்றை பதிவுசெய்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46154).

ஏனைய பதிவுகள்

12260 – நீதிமுரசு 1989.

இதழாசிரியர் குழு. கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரொப் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1989. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி). 138 பக்கம்,