சுந்தரராமசாமி (மூலம்), அரவிந்தன் (தொகுப்பாசிரியர்). தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (சென்னை 600005: மணி ஓப்செட், திருவல்லிக்கேணி).
95 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 21.5×14 சமீ., ISBN: 81-89359-25-8.
பிரமிளை நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர்மீது சுந்தரராமசாமிக்கு ஒரு கவர்ச்சியும் மானசீக உறவும் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவரைச் சந்தித்து நெருங்கிப் பழகிய இரண்டாண்டுகளிலேயே பிரமிளின் விசித்திரமான நடவடிக்கைகளாலும் பேச்சுக்களாலும் அந்தக் கவர்ச்சியும் மானசீக உறவும் கருகி உதிர்ந்துவிட்டன. அந்த வலியையும் அதன் பின்னதான பிரமிளின் வக்கிரமான தாக்குதல்களின் போதும் மௌனம் காத்ததற்கான காரணங்களையும் சமன்நிலை குலையாத நிதானத்துடன் இந்நூலில் சுந்தரராமசாமி நினைவுகூர்ந்துள்ளார்.