8774 ஐராங்கனி என சிறிலங்காவின் அன்ரிகனி: நமது காலத்தின் ஒரு துன்பியல் நாடகம்.

ஏனெஸ்ட் தளையசிங்கம் மக்கின்ரயர் (ஆங்கில மூலம்), குழந்தை ம.சண்முகலிங்கம்; (தமிழாக்கம்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு,  1வது பதிப்பு, நவம்பர் 2012. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).

120 பக்கம், புகைப்படங்கள்,  விலை: இந்திய ரூபா 150., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-81322-08-6.

சோஃபகிள்ஸ் எழுதிய அன்ரிகனி என்ற கிரேக்க நாடகத்தின் பாதிப்பில் சமகால இலங்கையை வைத்து எழுதப்பட்ட நாடகம் இது. ஐராங்கனி ஜெயவீரவும், அவளது சகோதரன் ரொபர்ட்டும் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் தமது பெற்றோரை இழந்து  பௌதிகவியல் விரிவுரையாளரான தாய்மாமனான சிதார்த் ராஜகருணவினால் வளர்க்கப்படுகிறார்கள். ராஜகருண பின்னாளில் சிறீலங்காவின் ஜனாதிபதியாகிறார்.  இவ்விருவரும் ஜே.வி.பி.கிளர்ச்சியாளருடன் தொடர்புபடுகின்றனர். கிளர்ச்சியின் உச்சகட்டத்தில் ரொபர்ட் பொலிசாரினால் கொல்லப்படுகிறான். அவனது பிணமும்அக்காலத்தில் வழக்கிலிருந்த – 1983 ஜுன் 4ம் திகதி அமுலுக்குவந்த சட்டத்தின் பிரகாரம் உரிய கௌரவமின்றி துரோகிகளாக்கப்பட்டு  குவியல்களாக எரிக்கப்படத் தயாராகின்றது.  இந்நிலையில் சகோதரனின் உடலை உரிய மரியாதையுடன் அடக்கம்செய்யவேண்டுமென ஐராங்கனி வளர்ப்புத் தந்தையான ஜனாதிபதியுடன் வாதிடுகின்றாள். ஜனாதிபதி மந்திரிசபைக் கூட்டத்திற்கு சென்றவருவதாகக் கூறிச் சென்றவர் இடைநடுவில் தற்கொலை குண்டுதாரியினால் நடுத்தெருவில் கொல்லப்படுகிறார்.  ஜே.வீ.பீ. மற்றும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் ஆகிய இரண்டு வரலாற்றுச் சம்பவங்களுக்கிடையே நாடகம் உரையாடல்களினூடாக நடத்திச்செல்லப்படுகின்றது. ஏனெஸ்ட் தளையசிங்கம் மக்கின்ரயர் தமது தமிழுணர்வினைச் சமரசஞ் செய்யாத கலைஞர். மனிதநேயம் போற்றும் ஈழத் தமிழர். கிரேக்க நாடக மரபையும், நாட்டிய சாத்திரத்தையும் உள்வாங்கி, உலகின் தலைசிறந்த நாடக மேதைகளான இங்கிலாந்தின் ஷேக்ஸ்பியர், அமெரிக்காவின் ஹென்றி மில்லர், ஐரோப்பாவின் பிரெக்ட் போன்றோருடைய பாணிகள் அனைத்தையும்  ஒருசேர இலங்கையர் சுவைப்புக்கு முன்வைத்த நாடகமேதை. அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்பவர்.

ஏனைய பதிவுகள்